ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர்..இலங்கையிடம் பல்பு வாங்கிய வங்கதேசம்...| Asia Cup 2023

x

ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரின், சூப்பர் ஃபோர் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில், இலங்கை 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

கொழும்பில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. பின்பு பேட் செய்த வங்கதேசம் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை, சூப்பர் ஃபோர் சுற்றில் 2 புள்ளிகளை பெற்றது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி அடைந்ததால், வங்கதேச அணிக்கு இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பு குறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்