இந்திய கிரிக்கெட் வீரர்அஸ்வின் புதிய சாதனை

x

இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். அஸ்வின் இதுவரை 36 முறை டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், 35 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்