இந்திய வீரர் அஸ்வின் சாதனை

x

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என அஸ்வின் சாதனை படைத்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் பேர்ஸ்டோவின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இது இங்கிலாந்துக்கு எதிராக அஸ்வினின் 100வது விக்கெட்டாக அமைந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற மைல்கல்லை அஸ்வின் எட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்