ஆசியக்கோப்பை கால்பந்து தொடர்...இறுதிப்போட்டிக்கு கத்தார் தகுதி - பரபரப்பான அரையிறுதியில் ஈரானை வென்ற கத்தார்

x

தோஹாவில் உள்ள அல்-துமாமா மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் கத்தாரும் ஈரானும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் கத்தார் முன்னிலை பெற்றது. 2வது பாதி ஆட்டத்தில் ஈரான் பதில் கோல் அடித்ததால் போட்டி விறுவிறுப்பானது. போட்டியின் 82வது நிமிடத்தில் கத்தார் வீரர் அல்மோயஸ் அலி கோல் அடித்தார். அதுவே வெற்றி கோலாகவும் மாற, பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் கத்தார் த்ரில் வெற்றி பெற்றது. வருகிற 10ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஜோர்டானுடன் கத்தார் மோதவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்