திக் திக் போட்டி... கடைசி வரை பரபரப்பாக நடைபெற்ற மேட்ச்... மிரட்டல் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா

x

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஷஃபிக் 9 ரன்களுக்கும், இமாம் உல் ஹக் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். கேப்டன் பாபர் அசாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். ரிஸ்வான் 31 ரன்களும், இஃப்திகார் அகமது 21 ரன்களும் எடுத்தனர். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷகீல் 52 ரன்களும், ஷதாப் கான் 43 ரன்களும் எடுத்தனர். 46 புள்ளி 4 ஓவர்களில் 270 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஷம்ஷி 4 விக்கெட்டுகளையும், யான்சென் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்


Next Story

மேலும் செய்திகள்