44வது சர்வதேச சதுரங்க போட்டி - சென்னை வந்தடைந்தது "ஒலிம்பியாட் ஜோதி"
நாளை தொடங்க உள்ள 44வது சர்வதேச சதுரங்க போட்டி செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னை வந்தடைந்தது.மாநிலக்கல்லூரி மைதானத்தில் அமைச்சர்கள், சதுரங்க விளையாட்டு சங்கத்தினர் வரவேற்பு.ஜோதியை பெற்று கொண்ட அமைச்சர்கள் மெய்யநாதன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன்.எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோரும் பங்கேற்பு.செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஜூன் 19ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைத்தார்.இந்தியாவில் 75 நகரங்களை சுற்றி வந்த ஜோதி சென்னை வந்தடைந்தது.துவக்க விழா நடைபெறும் நேரு உள்ள விளையாட்டு அரங்கிற்கு எடுத்து செல்லப்படும் ஜோதி.மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஜோதிக்கு வரவேற்பு.மாணவர்களின் இருசக்கர, மிதிவண்டி பேரணியுடன் ஜோதி எடுத்து செல்லப்படுகிறது.
Next Story