3வது ஒருநாள் போட்டி - அசத்திய இஷான் கிஷன், கில்... வெஸ்ட் இண்டீசை தாக்கிய தாக்கூர்

x

3வது ஒருநாள் போட்டி - அசத்திய இஷான் கிஷன், கில்... வெஸ்ட் இண்டீசை தாக்கிய தாக்கூர்

இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி, டிரினி டாட்டில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி, 351 ரன்கள் குவித்தது. இந்திய வீரர்கள் இஷான் கிஷன் 77 ரன்களும், கில் 85 ரன்களும், ஹர்திக் பாண்டியா 70 ரன்களும் குவித்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி, 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 200 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்த இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரையும் 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்