2024 டி20 உலகக் கோப்பை தொடர்.. தகுதிபெற்ற இரண்டு அணிகள்

x

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் தகுதிபெற்றன. ஸ்காட்லாந்தில் நடைபெறும் ஐரோப்பிய அணிகளுக்கான தகுதிச்சுற்றில், ஜெர்மனி உடனான போட்டி மழையால் ரத்தானதால், அயர்லாந்து டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது. மறுமுனையில் டென்மார்க்கை வீழ்த்திய ஸ்காட்லாந்து அணியும் டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்