தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சிந்து முன்னேற்றம்..!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார்...
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சிந்து முன்னேற்றம்..!
x
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு சிந்து முன்னேற்றம்..!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை யமகுச்சியுடன் சிந்து மோதினார். முதல் செட்டை 21க்கு 15 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்து வென்றார். ஆனால், 2வது செட்டில் மீண்டுவந்த யமகுச்சி, 22க்கு 20 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார். இதையடுத்து 3வது செட்டில் அதிரடியாக ஆடிய சிந்து, 21க்கு 13 என்ற கணக்கில் அதனைக் கைப்பற்றி, அரையிறுதிக்குள் நுழைந்தார். 

Next Story

மேலும் செய்திகள்