தொடர் தோல்வியில் சென்னை அணி

ஐ.பி.எல் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
x
ஐ.பி.எல் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி,  முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி வீரர்கள், அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முடிவில் 18 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே எடுத்து
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் ப​ஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்