பும்ரா வேகத்தில் சரிந்த இலங்கை... 109 ரன்களில் ஆல் அவுட்

பும்ரா வேகத்தில் சரிந்த இலங்கை... 109 ரன்களில் ஆல் அவுட்
x
இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், இலங்கை அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களூருவில் நடைபெற்று வரும் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில், அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், 2 ஆம் நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்து விளையாடிய இலங்கை, 109 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மேத்யூஸ் மட்டும் பொறுப்பாக விளையாடி அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின், முகம்மது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 143 ரன்கள் முன்னிலையில், இரண்டாவது இன்னிங்சை இந்தியா விளையாடி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்