மகளிர் உலகக்கோப்பை.. நியூசி.யை நொறுக்கிய ஆஸி

மகளிர் உலகக்கோப்பை.. நியூசி.யை நொறுக்கிய ஆஸி
x
மகளிர் உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில், நியூசிலாந்தை 141 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. வெல்லிங்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள், நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். அந்த அணி வீராங்கனை எலிஸ் பெர்ரி 68 ரன்களும், தஹிலா மெக்ராத் 57 ரன்களும் அடித்து ஆட்டமிழந்த நிலையில், கடைசி ஓவர்களில் ஆல்ரவுண்டர் கார்ட்னர் அதிரடி காட்டினார். 18 பந்துகளில் 4 சிக்சர்களுடன் அவர் 48 ரன்கள் அடித்ததால், 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலியா 269 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து வீராங்கனைகள், சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இதனால், அந்த அணி 31வது ஓவரில் 128 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.

Next Story

மேலும் செய்திகள்