ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் : அரையிறுதிக்கு முன்னேறி லக்ஷ்யா சென் அசத்தல்
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய இளம் வீரர் லக்ஷ்யா சென் முன்னேறி உள்ளார்.
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய இளம் வீரர் லக்ஷ்யா சென் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் மற்றொரு இந்திய வீரரான பிரனோய் உடன், லக்ஷ்யா சென் மோதினார். இதில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷ்யா சென், பிரனோயை திணறடித்தார். வெறும் 39 நிமிடங்களே நீடித்த இந்தப் போட்டியில், 21க்கு 15, 21க்கு 16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, லக்ஷ்யா சென் அரையிறுதிக்குள் நுழைந்தார்.
Next Story