"இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்மன்ப்ரீத்" - இந்திய கேப்டன் மிதாலி ராஜ்

"இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்மன்ப்ரீத் "
x
நியூசிலாந்தில் மார்ச் மாதம் தொடங்கவுள்ள மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணிக்கு துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் செயல்படுவார் என கேப்டன் மிதாலிராஜ் தெளிவுபடுத்தி உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் முதல் 3 போட்டிகளில் கவுர் துணை கேப்டனாக இருந்தார். எனினும் கடைசி 2 ஆட்டங்களில் தீப்தி சர்மா, துணை கேப்டனாக செயல்பட்டார். இந்நிலையில், இது தொடர்பாக பேசிய மிதாலிராஜ், தீப்தி சர்மாவை துணை கேப்டனாக பிசிசிஐ பரிசோதித்து பார்த்ததாகவும், உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்ப்ரீத் கவுர்தான் துணை கேப்டனாக செயல்படுவார் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்