காலிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

ஜோகோவிச்சை வீழ்த்திய செக். வீரர் நம்பர் ஒன் இடத்தை இழக்கிறார் ஜோகோவிச்
காலிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
x
துபாய் ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். துபாய் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச்சும், செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லியும் மோதினர். இதில் ஜோகோவிச் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 6க்கு 4, 7க்கு 6 என்ற செட் கணக்கில் வெஸ்லி வெற்றி பெற்றார். காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியடைந்த ஜோகோவிச் தொடரில் இருந்தும் வெளியேறினார். மேலும், இந்த தோல்வியால் நம்பர் ஒன் இடத்தையும் ஜோகோவிச் இழக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்