இந்தியா - இலங்கை முதல் டி20 போட்டி : இந்திய அணி அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
x
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. லக்னோவில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷண் 89 ரன்களும், ஸ்ரேயஸ் அய்யர் 57 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 137 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்