இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர் - இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்து உள்ளது.
x
டெஸ்ட் தொடருக்கு தொடக்க வீரர் ரோகித் சர்மாவை கேப்டனாகவும், வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை துணை கேப்டனாகவும் பிசிசிஐ நியமித்து உள்ளது. 

18 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், மயங்க் அகர்வால், விஹாரி, பண்ட், பரத் ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர்.

தமிழக வீரர் அஸ்வின், காயத்திலிருந்து குணமடைந்த ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ்,..

வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், ஆகியோரும் அணியில் உள்ளனர்.

குஜராத் வீரர் பிரியங்க் பஞ்சல், உத்தரப்பிரதேச வீரர் சவ்ரப் குமார் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில டெஸ்ட் தொடர்களில் மோசமாக விளையாடிய மிடில் ஆர்டர் வீரர்கள் புஜாரா, ரஹானே இருவரும் அணியில் இடம்பெறவில்லை.

18 பேர் கொண்ட டி-20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...

இலங்கைக்கு எதிரான முதல் டி-20 போட்டி வருகிற 24ம் தேதி லக்னோவில் தொடங்க உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்