IPL Auction 2022- அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள்

ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் இந்திய வீரர் இஷான் கிஷன் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு இஷான் கிஷனை ஏலத்தில் எடுத்தது.
x
ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாளில் இந்திய வீரர் இஷான் கிஷன் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு இஷான் கிஷனை ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஒட்டுமொத்த ஐபிஎல் ஏலத்திலும் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஒரே இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றார். இதற்கு அடுத்ததாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரை, 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.  மேலும் 'மிஸ்டர் ஐபிஎல்' என அழைக்கப்படும் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய நாளிலாவது ரெய்னாவை சென்னை அணி ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்