"விரைவில் மகளிர் ஐ.பி.எல் டி-20 தொடர்" - பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு

இந்தியாவில் மகளிர் டி-20 கிரிக்கெட் தொடர், விரைவில் தொடங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்து உள்ளார்.
x
இந்தியாவில் மகளிர் டி-20 கிரிக்கெட் தொடர், விரைவில் தொடங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்து உள்ளார். ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு மட்டுமே இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. மகளிர் அணிகளுக்கும் ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஐ.பி.எல் தொடருடன், 3 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி-20 தொடர் நடத்தப்பட்டுவரும் நிலையில், மகளிர் அணிகளுக்கும் ஐ.பி.எல். தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ முயற்சி எடுத்துவருவதாகவும், விரைவில் மகளிர் ஐ.பி.எல். தொடர் தொடங்கப்படும் என்றும் ஜெய்ஷா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்