"ஆஸி. கிரிக்கெட்டுக்கு சோகமான நாள்" - முன்னாள் கேப்டன் பாண்டிங் கவலை ! | #ThanthiTv

"ஆஸி. கிரிக்கெட்டுக்கு சோகமான நாள்" - முன்னாள் கேப்டன் பாண்டிங் கவலை
x
ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் ராஜினாமா செய்ததற்கு, ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கவலை தெரிவித்து உள்ளார். குறைந்த காலத்துக்கு மட்டும் பதவிக்காலத்தை நீட்டிக்க மறுப்பு தெரிவித்த லேங்கர், பயிற்சியாளர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், லேங்கர் பதவி விலகிய நாள், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு சோகமான நாள் என பாண்டிங் கூறி உள்ளார். ஒரு சகோதரரைப்போல் லேங்கர் தன்னிடம் பழகியதாகவும் பாண்டிங் நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்