லாரியஸ் விருதுக்கு நீரஜ் சோப்ராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

விளையாட்டு உலகின் ஆஸ்கர் என்றழைக்கப்படும் லாரியஸ் விருதுக்கு நீரஜ் சோப்ராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
x
விளையாட்டு துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் லாரியஸ் விருது 7 பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. இதில் சிறந்த திருப்புமுனை வீரர் விருதுக்கு இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்தார். இந்நிலையில், தற்போது அவர் லாரியஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது இந்தியாவிற்கு பெருமை சேர்ந்துள்ளது. இதற்கு முன்பு விளையாட்டின் சிறந்த தருணம் என்ற பிரிவின் கீழ் லாரியஸ் விருதை வென்ற ஒரே இந்திய விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர். அந்த வரிசையில் தற்போது நீரஜ் சோப்ராவின் பெயர் லாரியஸ் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்திருப்பதற்கு சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்