சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள தோனி

கிராஃபிக் நாவலாக வெளியாகும் "அதர்வா - தி ஆரிஜின்" என்ற நாவலில், சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் தோனி தோன்ற உள்ளார்.
சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள தோனி
x
கிராஃபிக் நாவலாக வெளியாகும் "அதர்வா - தி ஆரிஜின்" என்ற நாவலில், சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் தோனி தோன்ற உள்ளார். 

காமிக்ஸ் காட்சிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கிராஃபிக் நாவல் "அதர்வா - தி ஆர்ஜின்". ரமேஷ் தமிழ்மணி எழுதியுள்ள இந்த நாவலை, விர்சு ஸ்டுடியோஸ் உடன் மிடாஸ் டீல்ஸ் என்ற நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ளது. இந்த கிராஃபிக் நாவலில், அதர்வா என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில், கிரிக்கெட் வீரர் தோனி இடம்பெற்றுள்ளார். இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த நாவலுக்கான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தோனி, இந்த புதிய முயற்சியில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்