இந்தியா-வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர்: ரசிகர்களுக்கு அனுமதி இல்லை..!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர், ரசிகர்கள் இன்றி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.
x
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர், ரசிகர்கள் இன்றி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அகமதாபாத்தில் நடைபெறும் ஒரு நாள் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அதே வேளையில், கொல்கத்தாவில் நடைபெறவுள்ள டி20 தொடரில் 75 சதவீத ரசிகர்களுக்கு மேற்கு வங்க அரசு அனுமதியளித்துள்ளது. பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கும் ஒரு நாள் தொடரில் தனது ஆயிரமாவது ஆட்டத்தை இந்திய அணி விளையாடவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்