ஐசிசி புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு

சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது.
x
ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசையின் படி, ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், 873 புள்ளிகளுடன் முதலிடத்தலும், இந்திய அணியின் விராட் கோலி 836 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றனர். 801 புள்ளிகளுடன் இந்திய அணியின் ரோகித் சர்மா, நியூசிலாந்து வீரர் ராஸ் டெஸ்லருடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொள்கிறார்.அண்மையில் நடந்து முடிந்த தென் ஆப்ரிக்கா - இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில், அதிரடியாக விளையாடி சதம் விளாசிய டீ-காக், வாண்டெர் டுசென் ஆகிய வீரர்கள், 5 மற்றும் 10ஆவது இடத்தில் உள்ளனர். இதேபோல், 20 ஓவர் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில், இலங்கையின் வனிந்து ஹசரங்கா முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆல் ரவுண்டருக்கான தரவரிசை பட்டியலில், ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார். 
இந்த இரண்டு தரவரிசையிலும், இந்திய வீரர் ஒருவர்கூட இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய இந்திய வீரர் ரோகித் சர்மா, அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாட முழு உடல்தகுதியுடன் இருப்பதாக, பிசிசிஐ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்