"வேண்டாம்... அப்படி பண்ணாதீங்க..." - கோலி - அனுஷ்கா தம்பதியின் கோரிக்கை

தங்களது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் யாரும் பகிர வேண்டாம் என விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.
x
தங்களது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் யாரும் பகிர வேண்டாம் என  விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியர் கேட்டுக் கொண்டு உள்ளனர். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி அரைசதம் அடித்தார். அப்போது கேலரியில் இருந்த கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா, தங்களது குழந்தை வாமிகாவை தூக்கியவாறு கோலிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனை அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் பதிவுசெய்த நிலையில், முதல் முறையாக வாமிகாவின் புகைப்படம் பொதுவெளியில் வெளியானது. இதனையடுத்து, சமூக வலைதளங்களில் வாமிகாவின் புகைப்படத்தை கோலி ரசிகர்கள் பகிரத் தொடங்கினர். இந்நிலையில், வாமிகாவின் புகைப்படம் எடுக்கப்பட்டது தங்களுக்கு தெரியாது என்றும், அந்த புகைப்படத்தை தொடர்ந்து பகிர வேண்டாம் என்றும் இன்ஸ்டாகிராமில் கோலி-அனுஷ்கா தம்பதியர் பதிவிட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்