போராடி தோல்வியடைந்த இந்தியா - கண் கலங்கிய தீபக் சஹார்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு, ஆல்-ரவுண்டர் தீபக் சஹார் கண் கலங்கினார்.
x
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு, ஆல்-ரவுண்டர் தீபக் சஹார் கண் கலங்கினார். கேப்டவுனில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி தோல்வி அடைந்தது. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய தீபக் சஹார் அரைசதம் அடித்தார். எனினும் அவர் 47வது ஓவரில் ஆட்டம் இழந்தபின்னர், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியைத் தழுவியது. அப்போது, பெவிலியனில் அமர்ந்திருந்த தீபக் சஹார் தோல்வியை ஏற்க முடியாமல் கண்ணீர் சிந்தினார்.

Next Story

மேலும் செய்திகள்