புரூஸ்லீயின் சாதனையை முறியடித்த தமிழக வீரர் - ஒரு விநாடியில்16 குத்துகளை விட்டு புதிய உலக சாதனை

புரூஸ்ஸீலி ஒரு நொடியில் 9 குத்துக்களை விட்டு சாதனை படைத்த நிலையில், அவரின் சாதனையை முறியடித்து, ஒரு நொடியில் 13 குத்துகள் விட்டு புதிய உலக சாதனை படைத்தார் பாலி சதீஷ்வர்
x
சென்னையை சேர்ந்த பாலி சதீஷ்வர் என்பவர், தொழில்முறை எம்.எம்.ஏ குத்துச்சண்டை வீரராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ந் தேதி பிரபல கராத்தே வீரர் புரூஸ்லீயின் சாதனையை முறியடித்துள்ளார். புரூஸ்ஸீலி ஒரு நொடியில்  9 குத்துக்களை விட்டு சாதனை படைத்த நிலையில், அவரின் சாதனையை முறியடித்து, ஒரு நொடியில் 13 குத்துகள் விட்டு புதிய உலக சாதனை படைத்தார் பாலி சதீஷ்வர். தனது சாதனையை தானே முறியடிக்கும் வகையில், ஒரு நொடியில் 16 குத்துகள் விட்டு, மீண்டும் சாதனை படைத்துள்ளார். பாலி சதீஷ்வரின் சாதனையை பாராட்டி, சென்னையில் சோழன் என்ற உலக சாதனை புத்தகம் நிறுவனம் சான்றிதழ் வழங்கி கவுரவித்தது. 

குத்துச்சண்டை வீரர்களின் மையமாக விளங்கும் சென்னையில், அதற்கான கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று, சார்பட்டா திரைப்படத்தில் பீடி தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த கஜபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்