மார்ச் இறுதி வாரத்தில் தொடங்குகிறது ஐபிஎல் போட்டிகள்

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.
x
மார்ச் இறுதி வாரத்தில் தொடங்குகிறது ஐபிஎல் போட்டிகள் நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி வாரத்தில் தொடங்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்து உள்ளார்.ஐபிஎல் தொடரை நடத்துவது தொடர்பாக 10 அணிகளின் உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடைபெற்றது.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த, பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, அணியின் உரிமையாளர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதையே விரும்புவதாகவும்,நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்கி மே மாத இறுதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் ஐபிஎல் நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள்ளப்படும் எனவும் அதேநேரத்தில் வீரர்கள் மற்றும் நிர்வாகிகளின் பாதுகாப்பில் இதுவரை பிசிசிஐ எவ்வித சமரசத்தையும் செய்ததில்லை எனவும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதி வீரர்களுக்கான மெகா ஏலம் நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர் அதற்கு முன்பாக போட்டிகள் நடைபெறும் இடங்கள் தேர்வு செய்யப்படும் எனத் தெரிவித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்