இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி - கேப்டனாக களமிறங்கும் கே.எல்.ராகுல்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
x
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.  தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி, பார்ல் நகரில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட உள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு, கேப்டனாக இல்லாமல் அணியில் ஒரு சாதாரண வீரராக, விராட் கோலி விளையாட இருக்கிறார். டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விக்கு, பதிலடி தரும் வகையில் ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை முன்னிட்டு, இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்