இந்தியா - தென் ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் - 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க வெற்றி

கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி வென்றுள்ளது.
x
கடைசி டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி வென்றுள்ளது.

செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவும், ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற 2வது டெஸ்டில், தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று 1-க்கு 1 என்ற கணக்கில் தொடர் சமனிலை பெற்றன.  இந்நிலையில், கேப்டவுனில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 223 ரன்களும், தென்னாப்பிரிக்கா அணி 210 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த அந்த அணி 4 ஆம் நாள் ஆட்டத்தில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலக்கை எட்டிப் பிடித்தது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்த அணி கைப்பற்றி உள்ளது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது தென்னாப்பிரிக்கா வீரர் கீகன் பீட்டர்சனுக்கு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்