என்னை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை - கோலி அதிரடி
தான் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தான் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் சமனி உள்ள நிலையில் நாளை தொடங்க உள்ள 3 ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி மும்முரமாக உள்ளது. 2 ஆவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத கேப்டன் விராட் கோலி, நாளை நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் முழு உடற்தகுதியுடன் உள்ளேன் எனவும் உடற்தகுதி குறித்த வரும் விமர்சனங்கள் பற்றி தான் கவலை கொள்வதில்லை எனவும் தெரிவித்து உள்ளார். மேலும், தான் விளையாடுவதில் தனக்கு நிம்மதி உள்ளதாகவும் யாருக்கும் தன்னை குறித்து நிரூபிக்க வேண்டும் அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக முகமது சிராஜ் நாளைய போட்டியில் பங்கேற்க மாட்டார் எனவும் அவரை போன்ற ஒரு வேகப்பந்து வீச்சாளரை விளையாட வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.
==
Next Story