குதிரை சாகச போட்டிகளில் அசத்தல்...விருதுகளை குவிக்கும் 12 வயது சிறுவன்

தேசிய அளவிலான குதிரை சாகச போட்டிகளில், நீலகிரி மாவட்டம் பெங்கால் மட்டம் கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அசத்தி வருகிறார்.
x
பெங்கால் மட்டம் கிராமத்தில் வசித்து வரும் தேயிலை விவசாயியான ஜெப்ரியின் மகன் நீல் கேண்டில், ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது குழந்தை பருவம் முதலே குதிரைகளின் மீது அதிக ஆர்வம் கொண்ட சிறுவன் நீல் கேண்டில், குதிரை சாகச போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி என 30-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில், எதிர் வரும் ஆசிய போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிறுவன், அதற்கான விளையாட்டு மைதானம் இன்றி போதிய வசதிகள் இ​ல்லாமலும் தவித்து வருகிறார். இதனால் குதிரையேற்ற பயிற்சி மையம் அமைத்து, பல மாணவர்களை உருவாக்க வேண்டும் என சிறுவனின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்