இந்தியா - தென்னாப்பிரிக்கா 2ஆவது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் இந்திய அணி - 202/10

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா 2ஆவது டெஸ்ட் போட்டி - முதல் இன்னிங்சில் இந்திய அணி - 202/10
x
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்கியது. முதுகுவலி காரணமாக கேப்டன் விராட் கோலி போட்டியில் பங்கேற்காத நிலையில் கேப்டன் பொறுப்பை ஏற்ற கே.எல்.ராகுல் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 ரன்களும், அஷ்வின் 42 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்