கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகிய விவகாரம் - சேத்தன் சர்மாவின் கருத்தால் சர்ச்சை

டி-20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக கூறிய விராட் கோலியிடம், முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ வலியுறுத்தியதாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத்தலைவர் சேத்தன் சர்மா கூறி உள்ளார்.
x
கோலி தனது முடிவை அறிவித்தவுடன் அவரைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், தேர்வுக்குழு மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோலியை கேட்டுக் கொண்டதாகவும் சேத்தன் சர்மா தெரிவித்து உள்ளார். கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தபோது, முடிவை மாற்றுமாறு யாரும் தன்னிடம் கூறவில்லை என கோலி பேசியிருந்த நிலையில், சேத்தன் சர்மாவின் கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்