இந்தியா - தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
x
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன்படி, முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பாக உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, சமீபத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி நல்ல ஃபார்மில் உள்ளது. டீன் எல்கர் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில், அதிவேக பந்துவீச்சாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் இந்திய பேட்டர்களுக்கு நெருக்கடி அளிக்கக்கூடும். இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக கூறப்படும் நிலையில், இந்த தொடரில் கோலியின் செயல்பாடுகள் கவனம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்