ரோகித் சர்மாவுடன் பிரச்சினையா? - விராட் கோலி விளக்கம்

ஒருநாள் தொடரின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தன்னிடம் பிசிசிஐ ஆலோசனை எதுவும் நடத்தவில்லை என விராட் கோலி தெரிவித்து உள்ளார்.
ரோகித் சர்மாவுடன் பிரச்சினையா? - விராட் கோலி விளக்கம்
x
ஒருநாள் தொடரின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தன்னிடம் பிசிசிஐ ஆலோசனை எதுவும் நடத்தவில்லை என விராட் கோலி தெரிவித்து உள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட மாட்டார் என சமூகவலைதளங்களில் வதந்தி பரவியது.

இந்நிலையில் இதுதொடர்பாக விராட்கோலி விளக்கம் அளித்துள்ளார். அதில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தான் விளையாடுவேன் எனவும் தான் ஓய்வு எடுக்க ஒரு போதும் விரும்பியது இல்லை எனவும் தெரிவித்து உள்ளார்.

தனக்கும் ரோகித் சர்மாவிற்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று குறிப்பிட்ட அவர் இதனை கடந்த 2 வருடங்களாக தெளிவுபடுத்தி வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும், டி20 கேப்டன் பதவியை விட்டு விலகும் போதே தான் பிசிசிஐ நிர்வாகிகளிடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக தொடர்வதாக தெளிவாக கூறியதாகவும் ஆனால் தன்னிடம் ஆலோசிக்காமல் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கி உள்ளதாகவும் விராட் கோலி தெரிவித்து உள்ளார்.

பிசிசிஐ நிர்வாகம் தான் எந்தப் பொறுப்பில் இருக்க வேண்டாம் என்று நினைத்தால் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் தெரிவித்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்