தென் தமிழகத்தில் முதல் முறையாக - கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஹாக்கி தொடர்

தென் தமிழகத்தில் முதல் முறையாக - கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஹாக்கி தொடர்
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முதல் முறையாக தேசிய ஜூனியர் ஹாக்கி தொடர், வருகிற 16ம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் 30 மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதையொட்டி,  போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் செயற்கை புல்வெளி அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்தமிழகத்தில் முதன்முறையாக இந்தத் தொடர் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு ஹாக்கி கழகத்துக்கும், தொடரை நடத்த முயற்சிகளை எடுத்த தூத்துக்குடி எம்.பி., கனிமொழிக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்