ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் - அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

ஜூனியர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.
x
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா, பெல்ஜியத்துடன் மோதியது. ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஷர்தா நந்த் திவாரி (Sharda Nand Tiwari) பெனால்டி வாய்ப்பை, சரியாக பயன்படுத்தி கோலாக்கினார். இதனால், இந்திய அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து, பெல்ஜியம் வீரர்கள் கோல் அடிக்க போராடினர். எனினும், இந்திய கோல் கீப்பர் பவன் சிறப்பாக செயல்பட்டு, கடைசி நிமிடங்களில் பெல்ஜியத்தின் கோல் முயற்சிகளை தடுத்தார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. வரும் வெள்ளிக் கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்த உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்