இந்தியா - நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி - கான்பூரில் இன்று காலை தொடங்குகிறது
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டி-20 தொடரைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன்படி, முதலாவது டெஸ்ட் போட்டி, கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்திய அணியில் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, ஷமி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரஹானே தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. மேலும், மிடில் ஆர்டர் பேட்டர் (batter) ஷ்ரேயாஸ் ஐயர், டெஸ்ட் போட்டியில் இன்று அறிமுகமாக உள்ளார்.
Next Story

