ஐ.பி.எல். 33-வது லீக் ஆட்டம் - டெல்லி அணி அபார வெற்றி

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
x
துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 135 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி, 17 புள்ளி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. டெல்லி அணியில், அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 47 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த வெற்றியால், 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு டெல்லி முன்னேறி உள்ளது.Next Story

மேலும் செய்திகள்