கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி
கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி
x
கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்து உள்ளது.ஒரு நாள், டி-20, டெஸ்ட் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி உள்ளார். இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறும் டி-20 உலக கோப்பை தொடருக்குப் பின்னர்,  ஒரு நாள் மற்றும் டி-20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலக இருப்பதாகவும், ரோகித் சர்மா ஒரு நாள் மற்றும் டி-20 கேப்டனாக பொறுப்பேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இதற்கு பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் மறுப்பு தெரிவித்து உள்ளார். கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலக இருப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும், மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் கோலியே கேப்டனாக தொடர்வார் என்றும் அவர் உறுதிபட தெரிவித்து உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்