ஓவல் டெஸ்ட்டில் இந்தியா நிதான ஆட்டம் - 56 ரன்கள் பின் தங்கியுள்ள இந்திய அணி

ஓவல் டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்சில் இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது.
ஓவல் டெஸ்ட்டில் இந்தியா நிதான ஆட்டம் - 56 ரன்கள் பின் தங்கியுள்ள இந்திய அணி
x
ஓவல் டெஸ்ட் போட்டியின் 2 வது இன்னிங்சில் இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது.  இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.  இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை இழந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனம் எடுத்து விளையாடிய ரோகித் சர்மாவும், கே.எல் ராகுலும் பொறுப்புடன் விளையாடினர்.  2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் சேர்த்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்