கைகள் இல்லாவிட்டால் என்ன? - சாதித்த வீரர்; விடாமுயற்சியால் பாராலிம்பிக்கில் 2 பதக்கங்கள்

நடப்பு பாராலிம்பிக் தொடரில் கைகள் இரண்டையும் இழந்த இளம் வீரர் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
கைகள் இல்லாவிட்டால் என்ன? - சாதித்த வீரர்; விடாமுயற்சியால் பாராலிம்பிக்கில் 2 பதக்கங்கள்
x
நடப்பு பாராலிம்பிக் தொடரில் கைகள் இரண்டையும் இழந்த இளம் வீரர் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். சீன வீரரின் அசாத்திய சாதனை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.இதனுடன் வாழ பழகிய மாற்றுத்திறன் வீரர் வீராங்கனைகள், இன்று பாராலிம்பிக் தொடர் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.ஒவ்வொரு வீரர் வீராங்கனைகளுக்கு பின்னால் உத்வேகமூட்டும் பல கதைகள் இருக்க, சீனாவை சேர்ந்த 21 வயது இளம் வீரர் அசாத்திய சாதனை மூலம் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். 50 மீட்டர் கலப்பு தொடர் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றதோடு, அவரது அணி பாராலிம்பிக்கில் உலக சாதனை புரியவும் அவர் துணையாக இருந்துள்ளார்.2000ஆவது ஆண்டில் பிறந்த யுவான் வெயி(YUAN WEIYI), 8 வயதில் மின்சாரம் தாக்கிய விபத்தில் இரு கைகளையும் இழந்துள்ளார். இருப்பினும் துவண்டு போகாத யுவான், 2010ஆம் ஆண்டு நீச்சல் பயிற்சியை தொடங்கினார். பயிற்சியை தொடங்கிய 40 நாட்களிலேயே உள்நாட்டு நீச்சல் போட்டியில் ஜொலிக்க தொடங்கினார் யுவான். அண்மையில் நடந்து முடிந்த 50 மீட்டர் கலப்பு தொடர் நீச்சல் போட்டியில், இவர் அங்கம் வகித்த சீன அணி தங்கம் வென்றதோடு, ஆடவர் 50 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் வெண்கலம் வென்று சாதித்துள்ளார் யுவான். 8 வயதில் கைகளை இழந்தார்... வலி, வேதனைகளை சுமந்தார்.. ஆனால் முயற்சியை மட்டும் கைவிடாத யுவான், தற்போது உலக சாதனையாளராக உத்வேகம் அளித்துக்கொண்டிருக்கிறார்.
Next Story

மேலும் செய்திகள்