டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி - பதக்க வேட்டை நடத்திய இந்திய வீரர்கள்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் திங்கள்கிழமை இந்திய வீரர்கள் பதக்க வேட்டை நடத்தினர். ஒரே நாளில் இரண்டு பேர் தங்கம் வென்று அசத்தினர்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி - பதக்க வேட்டை நடத்திய இந்திய வீரர்கள்
x
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம், இந்தியாவின் பதக்க பட்டியலை தொடங்கிவைத்தார், பவினாபென் படேல். அவரை தொடர்ந்து ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வினோத் குமாருக்கு வெண்கல பதக்கம் அளிக்கப்பட்ட நிலையில், எஃப் 52 பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கான வரையறையில் வினோத் குமார் தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து அவரது பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.  
திங்கள்கிழமை நடைபெற்ற மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதி போட்டியில், 19 வயதான இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்றார்.  இதன்மூலம், பாரா ஒலிம்பிக் வரலாற்றில், தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையும் அவானி லெகாராவிற்கு கிடைத்திருக்கிறது. அவரைத் தொடர்ந்து ஈட்டி எறிதல் போட்டியின் எஃப் 64 பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் இந்திய வீரர் சுமித் அன்டில். இந்தப் போட்டியில் தனது உலக சாதனையை மூன்று முறை சுமித் அண்டில் முறியடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், வட்டு எறிதல் போட்டியில் யோகேஷ் கதூனியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் தேவேந்திர ஜஜாரியா வெள்ளி பதக்கமும், சுந்தர் சிங் வெண்கலமும் வென்றுள்ளனர். இதனால் 7 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா 25-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்