பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.
x
டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லெக்காரா பங்கேற்றார். இதில் இலக்கை துல்லியமாக குறிவைத்த லெக்காரா, முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும் தட்டிச் சென்றார். இதன்மூலம், பாரா ஒலிம்பிக் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்