20 ஆண்டுகளில் இந்தியாவின் செயல்பாடு - எந்த விளையாட்டில் வளர்ச்சி... எதில் சரிவு...?
நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.கடந்த 2000-ஆம் ஆண்டு நடந்த சிட்னி ஒலிம்பிக் பளுதூக்குதலில் கர்ணம் மல்லேஸ்வரி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
2004-ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் குஞ்சராணி தேவி 4-வது இடத்தைப் பிடித்த நிலையில்,.ஊக்கமருந்து சர்ச்சையால் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்திய பளுதூக்குதல் வீரர்கள் பங்கேற்கவில்லை.இதனையடுத்து 2012 லண்டன் ஒலிம்பிக்கிலும், 2016 ரியோ ஒலிம்பிக்கிலும் பளுதூக்குதலில் இந்திய வீரர்கள் தோல்வியைத் தழுவினர்.தற்போது டோக்கியோ ஒலிம்பிக் பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளி வென்று அசத்தி உள்ளார். குத்துச்சண்டையைப் பொறுத்த வரை, சிட்னி ஒலிம்பிக்கில் இந்திய வீரர் குர்சரண் சிங் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தகுதி சுற்றுடன் இந்திய வீரர்கள் வெளியேறினர்.2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும், 2012 ஒலிம்பிக்கில் மேரி கோமும் வெண்கலம் வென்ற நிலையில்,அதற்கடுத்த ஒலிம்பிக்கில் காலிறுதி வரையே இந்திய வீரர்கள் முன்னேறினர். தற்போது, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்ஹோஹைன் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்து உள்ளார்.
Next Story

