டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டி - வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியா சாதனை படைத்து உள்ளது.
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியா சாதனை படைத்து உள்ளது. இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பலம் வாய்ந்த ஜெர்மனியுடன் இந்தியா மோதியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில், இரு அணிகளும் தலா மூன்று கோல் அடித்து சமனிலை வகித்தன. தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதியில் பெனால்டி வாய்ப்புகளை இந்திய வீரர்கள் சரியாக பயன்படுத்தி மேலும் 2 கோல் அடித்த நிலையில், ஜெர்மனி 1 கோல் அடித்தது. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் இறுதியில் 5-க்கு 4 என்ற கோல் கணக்கில் இந்தியா த்ரில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் பதக்கம் வென்று இந்தியா சாதனை படைத்து உள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்தியா, ஹாக்கியில் தங்கப் பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்