சீன வீராங்கனையை வீழ்த்தி சிந்து வெற்றி.. ஆக்ரோஷமாக ஆடி அபார வெற்றி பெற்ற சிந்து

சீன வீராங்கனையை வீழ்த்தி சிந்து வெற்றி.. ஆக்ரோஷமாக ஆடி அபார வெற்றி பெற்ற சிந்து
சீன வீராங்கனையை வீழ்த்தி சிந்து வெற்றி.. ஆக்ரோஷமாக ஆடி அபார வெற்றி பெற்ற சிந்து
x
சீன வீராங்கனையை வீழ்த்தி சிந்து வெற்றி.. ஆக்ரோஷமாக ஆடி அபார வெற்றி பெற்ற சிந்து

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சாதனை படைத்து உள்ளார்.மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவை, பி.வி.சிந்து எதிர் கொண்டார். அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த சிந்து, இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், முதல் செட்டில் சீன வீராங்கனையை திணறடித்தார். இதன்மூலம், முதல் செட்டை 21-க்கு 13 என்ற கணக்கில் சிந்து கைப்பற்றினார். தொடர்ந்து நடந்த 2-வது செட்டிலும் சிறப்பாக ஆடிய சிந்து 21-க்கு 15 என்ற கணக்கில் அதையும் கைப்பற்றி போட்டியில் வென்றார். இதன்மூலம் சிந்துவுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் கிடைத்து உள்ளது.  மேலும், ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சிந்து படைத்து உள்ளார். இந்த பதக்கத்தின் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2-ஆக அதிகரித்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்