டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டி - இந்திய வீராங்கனை பூஜா ராணி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை லி குயானை, பூஜா ராணி எதிர்கொண்டார். 3 சுற்றுகளாக நடந்த போட்டியில் சீன வீராங்கனை நேர்த்தியான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், 5-க்கு பூஜ்யம் என்ற புள்ளிகள் கணக்கில் சீன வீராங்கனை வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். தோல்வி அடைந்த, இந்திய வீராங்கனை பூஜா ராணி ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்