டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி; 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை, இந்திய மகளிர் அணி வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டி; 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை, இந்திய மகளிர் அணி வென்றது. இந்திய மகளிர் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியுடன் மோதியது. இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில், இந்தியா மேலும் 2 கோல்கள் அடித்த நிலையில், தென் ஆப்பிரிக்கா ஒரு கோல் அடித்தது. இதனால், ஆட்ட நேர முடிவில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி வென்றது. இந்த வெற்றியால் புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் இந்தியா 4-வது இடம் பிடித்து உள்ளது. பிரிட்டனுக்கு எதிரான லீக் ஆட்டத்தில், அயர்லாந்து அணியின் வெற்றி, தோல்வியைப் பொறுத்து, இந்திய மகளிர் ஹாக்கி அணியின் காலிறுதி வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.

Next Story

மேலும் செய்திகள்